பரபரப்பு.. வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியை கடித்து குதறிய வெறிநாய்..!!
Updated: Nov 7, 2023, 16:58 IST
6ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வகுப்பறையில் நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல அர்ஜுனன் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வந்துள்ளார். சிறுமி பள்ளி வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்து குதறியுள்ளது. அருகில் இருந்த சிறுமிகள் அலறிய அடித்து ஓடிய நிலையில், சிறுமியின் அலறல் கேட்டு ஓடி வந்த ஆசிரியர் சிறுமியை மீட்டுள்ளார்.
நாய் கடித்து படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை கடித்த நாயை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடித்தே கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.