“சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

 

சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற சில விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், தன் இல்லத்திற்கு வந்த தம்பி விஜய், தன்னைத் தனிப்பட்ட முறையில் அதிகம் விமர்சித்து விட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டதாகவும், அதற்குத் தான் பரவாயில்லை என்றும், யாரைப் பற்றிப் பேசினாலும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் நினைவுகூர்ந்துள்ளார். அப்படி, தான் அன்போடு சொன்ன அறிவுரையைத் தற்போது அவர் மறந்து விட்டாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் விமர்சனங்களாக இருந்தாலும், பொதுவெளியில் பேசும் போது ஒருவருக்கொருவர் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் பேண வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.