"டிஜிட்டல் டிடாக்ஸ் கேள்விப்பட்டிருக்கீங்களா?" - மன அழுத்தத்திற்கு இதுவே நிரந்தரத் தீர்வு!
Mar 17, 2026, 05:00 IST
"காலையில எழுந்ததுல இருந்து தூங்குற வரைக்கும் போன் தான் உலகமா?".. இல்லைங்க.. சில பேர் நடுராத்திரியிலும் முழிப்பு வந்தா, போனை எடுத்து வாட்ஸ்-அப், இன்ஸ்டாவுல ஒரு பார்வை பார்த்துட்டு அப்புறமா படுத்துப்போம்னு சொல்றீங்களா? இந்த டிஜிட்டல் அடிமைத்தனம் நமது உறவுகளையும் மனநலத்தையும் மெல்லச் சிதைக்கிறது. இதற்காகவே இன்று உலகம் முழுவதும் 'டிஜிட்டல் டிடாக்ஸ்' முறை பிரபலமாகி வருகிறது.
வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அல்லது உங்களுக்கு விடுமுறை கிடைக்கும் ஒரு நாளில், சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகி இருங்கள்.
இப்படி செய்து வருவதால் உங்கள் மூளைக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும். கவனச்சிதறல் குறையும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தைச் செலவிட முடியும். "ஆன்லைனில்" இருப்பதை விட "நேரில்" இருப்பதே மகிழ்ச்சி என்பதை உணர்வீர்கள்.
உங்கள் மன அமைதி உங்கள் கையில் தான் இருக்கிறது!. இதைத் தான் டிஜிட்டல் டிடாக்ஸ் என்கிறோம். இதை ஒரு ட்ரீட்மெண்டாகவே பலருக்கும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். அதனால், வருமுன் காப்போம். டிஜிட்டல் உலகம், நமக்குப் பயன்பட வேண்டுமே தவிர, டிஜிட்டல் வளர்ச்சிக்கு நாம் அடிமையாகி விடக் கூடாது. எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருங்க.