எம்.ஜி.ஆர். சொத்துக்கு உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

திருச்சியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சொத்துக்கு உரிமை கோரப்பட்டுத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான திருச்சியில் உள்ள சொத்துகளுக்கு உரிமை கோரி, அவரது மனைவி வி.என். ஜானகியின் மகன் சுரேந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இந்த வழத்தைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதே வேளையில், எம்.ஜி.ஆர் சொத்து மீதான தங்களது உரிமையைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்ட விரும்பினால், மனுதாரர் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.