undefined

 நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... குடிநீருக்காக பல கிமீ அலையும் அவலம்...  70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி நீரை பிடிக்கும் மக்கள்!  

 
மகாராஷ்டிரா மாநிலத்தில்  நாசிக் மாவட்டத்தில்  பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து  அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சில பெண்கள் கிணற்றை சுற்றி பாத்திரங்களுடன் காத்திருக்க, ஒருவர் கயிறு உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுப்பது தெரிகிறது.  
இதன்மூலம் அடிப்படை வசதியான தண்ணீருக்காக மக்கள் இன்னும் போராட வேண்டிய நிலைமை தான் நீடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   தேர்தல் நேரங்களில் அள்ளி வீசப்படும்  வாக்குறுதிகளில்  மக்கள் ஒரு சொட்டு குடிநீருக்காகவே தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  

நிலத்தடி நீர் கணக்கெடுப்பின் அடிப்படையில், 2025ம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் உள்ள 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஏற்கனவே உள்ள வறண்ட கிணறுகளையே நம்பி உயிரை பணயம் வைத்து தண்ணீரைத் தேடி அலையும் நிலைமை நீடிக்கிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!