கனமழை... முதல்வரின் தென்காசி பயணம் ரத்து... மாவட்ட ஆட்சியர்களுடன் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வரின் தென்காசி பயணம், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!