undefined

சென்னையில் கனமழை எச்சரிக்கை.. ரப்பர் படகுகளுடன் 120 தீயணைப்பு வீரர்கள் முகாம்!

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்த்தேக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு மீட்பு தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களிலிருந்து 120 தீயணைப்பு வீரர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் 17 ரப்பர் படகுகள் உள்ளிட்ட அவசரகால மீட்பு உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்கனவே சென்னையில் 900-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக வந்துள்ள இந்த படையணி நகரின் நீர்தேக்கப் பகுதிகளில் பிரிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் முடிச்சூர், வேளாச்சேரி, சேலையூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட மொத்தம் 16 தண்ணீர் தேங்கக்கூடிய இடங்கள் அடையாளங்காணப்பட்டு அங்கு வீரர்கள் கண்காணிப்பு முகாம்கள் அமைத்துள்ளனர்.

இதோடு, வங்க கடலில் உருவாகி வரும் சூறாவளி புயல் செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே நிலத்தைத் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழையை உருவாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக ரப்பர் மிதவைகள், கயிறுகள், மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் திறமையுடைய வீரர்களும் சேர்ந்து பணியில் ஈடுபட தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து துறைகளும் உயர் விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?