சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க... இரவு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!  

 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாகப் பரவலாக மழை பெய்யக் கூடிய சூழல் உருவாகத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி இன்று ஜூலை 29-ஆம் தேதி இரவு  தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மழை அறிவிப்பு வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்குச் சற்று ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

வானிலை மையத்தின் அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பொழியக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாகப் பல மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களிலும் மழை நீடிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. திடீர் இடி மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் திறந்தவெளிகள் மற்றும் மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கும்படி   அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.