கனமழை... இன்று கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அக்டோபர் 26, திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, மேம்பாலச் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவாகும் அர்னாப் புயல் சுழற்சி காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களிலும் தொடரும் மழை காரணமாக இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.