தமிழகத்தில் கனமழை.... வங்கக்கடலில் அடுத்த புயல் உருவாகிறது!

 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வரும் நவம்பர் 19-ஆம் தேதிக்குப் பிறகு புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அதன்பிறகு படிப்படியாக வலுப்பெற்று வரும் நவம்பர் 19-ஆம் தேதிக்குப் பிறகு புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

உலக வானிலை அமைப்பு  விதிகளின்படி, இந்தப் புதிதாக உருவாகும் புயலுக்கு 'அக்வான்' (Agwan) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரானது அரக்கன் என்ற பொருளைத் தருவது குறிப்பிடத்தக்கது.

வானிலை மாற்றங்களைச் செவ்வனே கண்காணித்து வரும் இந்திய வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தொடர் எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது.