தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
Updated: Jul 21, 2026, 18:50 IST
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், சில இடங்களில் தற்காலிகமாக வெப்பத்தின் தாக்கம் நிலவக்கூடும் என்பதால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.