தமிழகத்தில் இன்றிரவு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!
Jul 29, 2026, 18:15 IST
தமிழகத்தில் இன்று ஜூலை 29 இரவு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இடி மின்னலும் பதிவாக வாய்ப்புள்ளது.
அதே சமயம் திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலக் கீழ்அடுக்குக் சுழற்சி மற்றும் மாறுபாடு காரணமாக இந்த மழைப் பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.