தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
Aug 13, 2026, 09:00 IST
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று தமிழலகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மலைப்பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.