தமிழகத்தில் 4-5 நாட்களுக்கு இடியுடன் கனமழை - வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தகவல்!

 

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிரம் அடைந்திருந்த தென்மேற்கு பருவமழை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை சரிவு: கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் தீவிரமடைந்திருந்த தென்மேற்கு பருவமழை இன்றுடன் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரப்பதமான காற்று மற்றும் பகல் நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.