பலத்த பாதுகாப்பு... இன்று காலை கோவை வருகிறார் துணை ஜனாதிபதி!

 

இன்று காலை கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஜி.கே.என்.எம். நர்சிங் கல்லூரியைத் த் இறந்து வைக்க கோவை வருகிறார் துணை ஜனாதிபதி.

இன்று மாலை 5 மணிக்குக் கல்லூரி திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாகப் புறப்பட்டு அவர் கோவை விமான நிலையத்தை வந்தடைகிறார். 

துணை ஜனாதிபதியின் கோவை வருகையை முன்னிட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் முதல் விழா நடைபெறும் பகுதி வரையிலான வழித்தடங்களில் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விழா அரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியத் துணை ஜனாதிபதியின் இந்த கோவை வருகை அப்பகுதி மக்களிடையேயும் மருத்துவத் துறையினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.