சார் தாம் யாத்திரையில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துகள்! 9 ஆண்டுகளில் 5 முக்கிய விபத்துகள்; 2026-லும் 6 பேர் பலி

 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சார் தாம் புனிதத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த யாத்திரை வழித்தடத்தில் குறைந்தது 5 முக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது சார் தாம் யாத்திரை. இங்கு செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன.

விபத்துகளின் பின்னணி:

2017 ஜூன் 10-ல் பத்ரிநாத் அருகே நிகழ்ந்த விபத்தில் விமானப் பராமரிப்புப் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

2022 அக்டோபர் 18-ல் கேதார்நாத் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மோதியதில் விமானி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

2025 மே 8-ல் உத்தரகாசி மாவட்டம் கங்க்நானி அருகே ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்; ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதே ஆண்டு ஜூன் 15-ல் கவுரிகுண்ட் அருகே நிகழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

2026-ல் மீண்டும் சோகம்:

அக்டோபர் 30-ம் தேதி பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர், சமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர்.

மலைப்பகுதிகளில் மாறும் வானிலை, குறைந்த பார்வைத்திறன், கடினமான நிலப்பரப்பு ஆகியவை ஹெலிகாப்டர் இயக்கத்தில் சவால்களை ஏற்படுத்துகின்றன. விபத்துகள் தொடர்வதால் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்