இன்று முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய நிதி மாற்றங்கள் - பாக்கெட்டைப் பாதிக்கும் அதிரடி அறிவிப்புகள்!

 

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல்வேறு புதிய பொருளாதார மற்றும் நிதிசார் விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில், சாமானிய மக்களின் பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கக்கூடிய முக்கிய மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் மற்றும் வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றன. இதன் தாக்கம் சமையலறைச் செலவுகளில் நேரடியாக எதிரொலிக்கும்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோருக்கான குடியேற்றப்  செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இனி போர்டிங் பாஸில் முத்திரையிட வேண்டிய அவசியமில்லை என்பதால், பயணிகள் தங்கள் மொபைலிலுள்ள 'இ-போர்டிங் பாஸ்' அல்லது அச்சிடப்பட்ட நகலைக் காட்டி விரைவாகச் சோதனையைக் கடக்கலாம்; இதனால் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும்.

விமான எரிபொருள், சி.என்.ஜி. மற்றும் பி.என்.ஜி. விலைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதால், இவை விமானப் பயணக் கட்டணங்களிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனங்கள் தங்கள் கார்கள் மற்றும் எஸ்.யு.வி.-களின் விலையை உயர்த்தியுள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் வகையில், மாடல்களுக்கு ஏற்ப விலை ரூ. 25,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்களின் முதலீட்டு வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம்.

வங்கிகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டண வரம்புகளை மாற்றியமைக்கக்கூடும் என்பதால், பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்பு புதிய கட்டண முறைகளை அறிந்துகொள்வது அவசியமாகும்.