வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட இதோ எளிய டிப்ஸ் !
ஒரு நபருக்கு வாய் துர்நாற்றம் இருந்தால், அவரிடம் நெருங்கியவர்களுக்கே கூட அருகில் அமர்ந்து பேசுவது சிரமமாகிவிடும். பலர் தினமும் பல் துலக்கியும், வாய் சுத்தமாக வைத்தாலும் துர்நாற்றம் நீங்காமல் இருக்கும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது, வாய் அடிக்கடி வறண்டு போவது (Xerostomia) முக்கிய காரணமாகும். இது வாய் உள்ளே துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. அதுபோன்று பல் மேல் தங்கும் பாக்டீரியா படலம் (பற்காரை) துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது. பல் சுத்தம் செய்யாமல் இருப்பது, ஈறுகளில் வீக்கம், பல் சொத்து, அல்சர், குடல்புண், சர்க்கரை நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் ஆகியனவும் இதற்குக் காரணமாகும்.
வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்: தினமும் காலை, இரவு என இருவேளையும் பல் துலக்க வேண்டும்; நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்; உணவுக்குப் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் கொண்டு ஆயில்புல்லிங் செய்வது நன்மை தரும். நாளொன்றுக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உண்ண வேண்டும். உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தல், மிளகு, ஏலக்காய் அல்லது சோம்பு மென்று சுவைப்பது வாய் துர்நாற்றத்தை குறைக்கும். சுத்தமான வாயும் சீரான உணவுப் பழக்கங்களும் துர்நாற்றமில்லா நம்பிக்கையுடன் வாழ உதவும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!