திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி போராட்டம்! போலீசார் குவிப்பு

 

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்டகாலமாக சர்ச்சை நிலவி வருகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மதுரையில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மலைப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.