வரலாற்று சிறப்பு... பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது... மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆவேசம்!
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. உடனடியாக தண்ணீரையும் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தானும் ரத்து செய்து பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி ஆர் பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில் “ சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்தது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தேச நலன் மிக்க முடிவு. இனி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சிந்து நதிநீரை நம்பியே 92 சதவீதம் விவசாயம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!