உலகக் கோப்பை ஹாக்கி... இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா!
Aug 22, 2026, 07:44 IST
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்றில் இந்திய அணி இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்தத் தொடரின் 2-வது சுற்றில் ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்பதால், இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.