அதிர்ச்சி!! பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார் !! தூக்கத்திலேயே உயிரிழந்த சோகம்!!

 

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் காலமானார். இவருக்கு வயது 87.  இவர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது. மே 18ம் தேதி  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.ஜிம் ப்ரவுன்  கால்பந்து வீரர், சமூக ஆர்வலர் என பன்முகத்திறமை வாய்ந்தவராக திகழ்ந்தார்.  பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் உடன் ரன்னிங் மேன், 100 ரைபிள்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஹாலிவுட் உலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜிம் ப்ரவுன். 2L60T The Running Man, 100 Rifles 6T60T L160 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது சிறப்பாக நடிப்பால் ரசிகர்களை மிகவும் மனம் கவர்ந்துள்ளார். பிரபல நடிகராக இருந்த அவர், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரராகவும் இருந்து வந்தார்.

அவருக்கு அமெரிக்காவின் கால்பந்து மைதானத்தில்  சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது உயிரிழப்பிற்கு பிரபலங்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், திரைத்துறையினர், கால்பந்து ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.