பிரபல ஹாலிவுட் நடிகை கிம்மாரி ஜான்சன் மாரடைப்பால் மரணம்... மிஸ் யு.எஸ். பட்டம் வென்றவர்!

 

ஹாலிவுட் நடிகையும் மாடலுமான கிம்மாரி ஜான்சன் (50) காலமானார். தொலைக்காட்சித் தொடரிலும், ட்யூட், வேர் இஸ் மை கார்? திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் அறியப்பட்ட இவர், மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி அவருக்கு திடீர் இதயப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், உறவினர்களால் அங்குள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு இதய ரத்த நாளத்தில் அனியூரிசம் தொடர்பான பாதிப்பு இருப்பதாகக் கண்டறிந்ததாக அவரது உறவினர் ரோண்டா ஸ்காட் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த கிம்மாரி, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிப்புடன் மாடலிங், தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த அவர், அழகுப் பராமரிப்புப் பொருட்களுக்கான சொந்த நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார். 1992-ல் மிஸ் பென்சில்வேனியா யுஎஸ்ஏ பட்டம் வென்ற அவர், பின்னர் மிஸ் யுஎஸ்ஏ போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.