ஹாங்காங் ஓபன் டென்னிஸ்... சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கிளாரி லியூ!

 

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை கிளாரி லியூ அபார வெற்றி பெற்றுத் தனது முதல் டபிள்யூ.டி.ஏ டூர் ஒற்றையர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஹாங்காங்கில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் கிளாரி லியூ, பிலிப்பைன்ஸ் நாட்டின் இளம் வீராங்கனை அலெக்ஸ் ஈலாவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாரி லியூ 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸ் ஈலாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றசியின் மூலம் கிளாரி லியூ தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் முதல் டபிள்யூ.டி.ஏ டூர் ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். உலகத் தரவரிசையில் 102-வது இடத்தில் இருந்த கிளாரி லியூ, தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்த வலிமையான ஈலாவை மிக எளிதாக வீழ்த்தியது டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஹாங்காங் ஓபன் தொடர் முழுவதும் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் கிளாரி லியூ சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.