கூலிப்படை ஏவி மகளின் காதலனை ஆணவக் கொலை செய்த தவெக நிர்வாகி... தட்டி தூக்கிய காவல்துறை!
Aug 22, 2026, 19:40 IST
தையூரில் தனது மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரைக் கூலிப்படையை ஏவி கொலை செய்த தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அந்தஸ்து காரணமாக இந்தப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி பிரவீனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் கவுதம் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் தொடர்புடைய கூலிப்படைத் தலைவனான சதீஷை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.