24 இந்திய மாலுமிகள் பயணித்த எல்பிஜி கப்பல் மீது தாக்குதல்... ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு!

 

 

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய எல்பிஜி கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த 24 இந்தியர்கள் உட்பட 25 பணியாளர்களும் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'TARA GAS' என்ற பெயருடைய இந்த எல்பிஜி கப்பல், கடந்த நவம்பர் 16-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 24 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 25 பேர் பணியில் இருந்தனர்.

allowfullscreen

இதுகுறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்டுள்ள தகவலில், கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்