கொடூரம்... தாயின் கண்முன்னே லாரி மோதி 12-ம் வகுப்பு மாணவி பலி!

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 12-ஆம் வகுப்பு மாணவி, பின்னாலிருந்து வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா (16), தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்ட் கலவை லா எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

லாரியின் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்த மாணவி அர்ச்சனாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரைப் பிடிக்கச் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.