திண்டுக்கல் அருகே கோர விபத்து; வாகனம் மோதி 4 சிறுவர்கள் பலி!

 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நான்கு சிறுவர், சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தனுஸ்ரீ (5), மோசிகீரன் (6), அனன்யா (6) மற்றும் யோக வர்ஷினி (11) ஆகிய நான்கு சிறுவர், சிறுமிகள் மீது வேகமாக வந்த வாகனம் மோதியுள்ளது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த கோர விபத்தில் நான்கு சிறார்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ள அந்த அடையாளம் தெரியாத வாகனம் குறித்தும், ஓட்டுநர் குறித்தும் வடமதுரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.