பெரம்பலூர் அருகே கோர விபத்து.. ஆம்னி பேருந்து மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது ஆம்னி பேருந்து மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக அந்தக் கார் பலமாக மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.