பயங்கரம்: மதுபோதையில் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில், மதுபோதையில் இருந்த நண்பர்கள் 4 பேர் சேர்ந்து விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரைக் கல்லால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரனுக்கும் அவரது நண்பர்கள் 4 பேருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து விக்னேஸ்வரனின் தலையில் கல்லைப் போட்டுப் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார், விக்னேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான குற்றவாளிகள் 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.