சென்னையில் கொடூரம்... அரசுப் பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்துக் கொடுத்து பாலியல் தொல்லை -  மர்ம கும்பல் வெறிச்செயல்!

 

சென்னை வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவி, வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது மாணவி கழிவறைக்குச் சென்ற சமயத்தில், பள்ளிச் சுற்றுச்சுவர் வழியாக உள்ளே நுழைந்த மர்மக் கும்பல் அத்துமீறிச் செயலில் ஈடுபட்டுள்ளது. கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு கைகுட்டை மூலம் மயக்க மருந்து கொடுத்து, அந்த கும்பல் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது.

மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாணவி மீட்கப்பட்டு, உடனடியாக மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையும் மருத்துவக் கண்காணிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்ட மர்மக் கும்பல் யார் என்பது குறித்தும், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அல்லது சிசிடிவி பதிவுகள் அடிப்படையிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.