சேலத்தில் கொடூரம்... தண்ணீர் தொட்டியில் இளம்பெண் உடல் துண்டு துண்டாக மீட்பு - 3 பேரிடம் தீவிர விசாரணை!

 

சேலம் அரிசிபாளையம் பகுதியில் பூசாரி ஒருவரின் வீட்டு மாடித் தண்ணீர் தொட்டியில் பெண் ஒருவர் உடல் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுச் சாக்கு மூட்டையில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள பூசாரி என்பவரின் வீட்டு மாடியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொடூரமாகத் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுச் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஒரு சமையல்காரர் உள்பட மொத்தம் 3 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.