புதுக்கோட்டையில் கொடூரம்... மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தினசரி வழக்கம் போலத் தனது வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அவரை வழிமறித்த சமூக விரோதிகள் சிலர், இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடி சென்றுள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் பலனாக, இச்சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய மாரிமுத்து என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாரிமுத்துவிடம் இந்த குற்றச் செயலின் பின்னணி குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு முக்கியக் குற்றவாளியை போலீஸார் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நேர்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பலத்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.