"வெறும் 10,000 ரூபாயை வெச்சுக்கிட்டு எப்படி பாலம் கட்டுவீங்க?" - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் நக்கல் கேள்வி!

 

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்ததுடன், பாலங்கள் கட்டியது குறித்த சர்ச்சைக்குச் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

தான் திமுக கட்டிய பாலத்தின் மீது ஏறி நின்று ஷூட்டிங் செய்வதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருவதைக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், தாங்கள் சினிமாவில் உழைத்துச் சம்பாதித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

"நான் தெரியாமல் கேட்கிறேன்; இந்தப் பாலங்களை நீங்கள் என்ன உங்கள் சொந்தக் காசிலா கட்டினீர்கள்? அல்லது கோபாலபுரத்தில் இருந்தா பணம் எடுத்து வந்து கட்டினீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், ஊழல் செய்து கோடிக்கணக்கில் அடித்து வைத்த பணத்தில் தான் இவையெல்லாம் கட்டப்பட்டதா எனச் சாடினார்.

மேலும் மு.க.ஸ்டாலினை நோக்கி, "உங்கிகிட்டயே வெறும் 10,000 ரூபா தான் இருக்கு; அந்தப் பணத்தை வச்சுக்கிட்டு உங்களால் எப்படி பாலம் கட்ட முடியும்?" என்று நக்கல் செய்து பேசியது பிரசாரக் கூட்டத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.