undefined

‘ரஜினி படத்தில் எப்படி ஜாதியை பேச வைப்பாய் என விமர்சித்தார்கள்’  - வைரலாகும் பா. ரஞ்சித் வீடியோ

 

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான சமூக கோணங்களை திரைமேடையில் கொண்டு வந்த இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் ‘பைசன்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கண்டுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

‘கபாலி’ ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய படம். ஆனால், வசூல் வெற்றியை விட விமர்சனங்கள் அதிகமாக பேசப்பட்டன. ‘இந்த நடிகரிடம் நீ எப்படி இப்படி பேச வைக்கிறாய்’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால், ரஜினி தான் எனை நம்பி ‘காலா’ பட வாய்ப்பை அளித்தார். நான் அதற்குப் பிறகு சாதாரண கமர்ஷியல் படத்தை இயக்க முடியுமாயிருந்தது. ஆனால் நிலமற்ற மக்களுக்கு நில உரிமையைப் பற்றி பேசக் கூடிய படத்தை ரஜினியுடன் எடுத்தேன்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?