"இத்தனை ஆண்டுகளாக வீரமணி எப்படி தப்பித்து வந்தார்?" - குஷ்பு ஆவேசக் கேள்வி!

 

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனை வருடங்களாக அவர் எவ்வாறு தப்பியோடினார் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குழந்தைகளின் கண்ணீரை அல்லது வலியை எப்பேர்ப்பட்ட பணத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது எந்தச் சூழலிலும் மன்னிக்க முடியாத கொடூரமான செயல் என்றும், இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.