இப்படியெல்லாமா பண்ணுவீங்க... காதலியைத் துண்டு துண்டாக வெட்டி, பைக்குள் திணித்து ஆபீஸ் ஃப்ரீசருக்குள் வைத்திருந்த காதலன்!
தாய்வான் நாட்டின் தைபே நகரில் அமைந்துள்ள ஒரு அலுவலகக் கட்டிடத்தில் உள்ள ஃப்ரீசருக்குள், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் நாட்டின் தலைநகரான தைபேவில் உள்ள ஒரு அலுவலகத்தில் இயங்கி வந்த ஃப்ரீசருக்குள் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உறைந்த நிலையிலான உடல் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தனது காதலரான வூ என்பவருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, அவருடனான காதலைப் பிரிக்க விரும்பி உறவை முறித்துக்கொள்ள முற்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் முன்விரோதத்திலும் காதலன் வூ அப்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
கொலை செய்த பிறகு உடலை உடனடியாக வெளியில் அப்புறப்படுத்த முடியாததால், அதனை மறைப்பதற்காக அலுவலகத்திலிருந்த ஃப்ரீசருக்குள் திணித்து வைத்துள்ளார். இதற்கிடையே, அப்பெண்ணைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், காதலன் வூவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.