பிச்சை எடுத்தால் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம்? சோதனையில் இறங்கிய யூடியூபர்

 

 

 

பிச்சை எடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை சோதித்து பார்க்க பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த் தனது நண்பர் சச்சினுடன் ஹரித்வாரில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சச்சின் கழுத்தில் கியூஆர் கோட் தொங்கவிட்டபடியும், அழுக்கு படிந்த கிழிந்த துணிகளை உடுத்திக்கொண்டும் ஹைடெக் பிச்சைக்காரர் போல வேடமிட்டு பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார்.

allowfullscreen

சுமார் 8 மணி நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக 4 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது என்று யூடியூபர் புருசோத்தம் கூறியுள்ளார். இதே அளவு தொகையை ஒருவர் தினமும் சம்பாதித்தால், ஒரு மாதத்தில் சுமார் 1.2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நாள் முழுவதும் தொடர்ந்து பலரிடம் சென்று பிச்சை கேட்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக சோர்வை ஏற்படுத்துவதாக இருவரும் கூறினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ஒரே நாளில் 4 ஆயிரம் ரூபாய் கிடைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் பிச்சை எடுப்பது சிலருக்கு வாழ்வாதாரமாக மாறிவிட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். அதேவேளையில், ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்ட பரிசோதனையை வைத்து உண்மையில் பிச்சையை நம்பி வாழும் மக்களின் அன்றாட கஷ்டங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.