undefined

டி20 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் - எப்படி முன்பதிவு செய்வது?!

 

ஐசிசி நேற்று இரவு 7 மணி முதல் டி20 உலகக்கோப்பை  அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

ரசிகர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tickets.t20worldcup.com அல்லது BookMyShow தளம் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அரையிறுதி 1: மார்ச் 4, 2026 (கொழும்பு அல்லது கொல்கத்தா) அரையிறுதி 2: மார்ச் 5, 2026 (மும்பை வான்கடே மைதானம்) இறுதிப் போட்டி: மார்ச் 8, 2026

அரையிறுதி 1 மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்கள் சூப்பர் 8 சுற்றின் முடிவுகளைப் பொறுத்தே இறுதியாகும். ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பிலும், இந்தியா தகுதி பெற்றால் மும்பை வான்கடே மைதானத்திலும் தங்களது அரையிறுதி ஆட்டங்களை விளையாடுவார்கள்.

டிக்கெட் விலையானது இருக்கை வசதி மற்றும் பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும். ஒருவேளை நீங்கள் ஒரு மைதானத்திற்கு டிக்கெட் வாங்கி, அங்குப் போட்டி நடைபெறாமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால், அந்த டிக்கெட் கட்டணம் முழுமையாகத் திரும்பத் தரப்படும்  என ஐசிசி உறுதியளித்துள்ளது.

தற்போது சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னிலையில் இருப்பதால், அரையிறுதி வாய்ப்புக்கான போட்டி கடுமையாக உள்ளது. எனவே, டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீரக்கூடும் என்பதால் ரசிகர்கள் முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.