டிஎன்பிஎஸ்சி குரூப்-1 ஹால் டிக்கெட் வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப் – 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குரூப் – 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தேர்வர்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வு வரும் செப்டம்பர் 27, 2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கொள்குறி வகைத் தேர்வாகும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நான்கு தாள்களைக் கொண்ட விரிந்துரைக்கும் வகை முதன்மைத் தேர்வை எழுதத் தகுதி பெறுவார்கள். அதனைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்பதால், இத்தேர்வு மொத்தம் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 23, 2026 அன்று வெளியானது. இத்தேர்வில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியமான கல்வித்தகுதியாகும்.