கள்ளக்காதல் தகராறில் பெண்ணைக் கொன்று உடலைப் புதைத்த கணவர், மனைவி கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!

 

தூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பகுதியில் மாரிமுத்து என்பவருடன் பிருந்தாதேவி என்ற பெண் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் அங்கு வந்த மாரிமுத்துவின் மனைவி சரவணப்பிரியாவுக்கும் பிருந்தாதேவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சரவணப்பிரியா, அங்கிருந்த தலையணையால் பிருந்தாதேவியின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளார். இந்தத் கொடூரச் செயலில் கணவர் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியின் தம்பி கார்த்திக் ஆகிய இருவரும் உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். பிருந்தாதேவியின் உடலை சாக்கு மூட்டையாகக் கட்டி, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரகசியமாகப் புதைத்துள்ளனர்.

மாயமான பிருந்தாதேவி குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மாரிமுத்து மற்றும் சரவணப்பிரியாவைக் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அளித்த தகவலின்படி புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி மீட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கார்த்திக்கைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.