“குடும்பம் நடத்த வரமாட்டேன்” என்ற மனைவி! ஆத்திரத்தில் மூக்கை கடித்த கணவன்!

 

 

உத்தரபிரதேசத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வரமாட்டேன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த கணவன், அவரது மூக்கை கடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கணவன் - மனைவி இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மனைவி கணவருடன் மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்த வரமாட்டேன் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் மனைவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் மூக்கை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத் தகராறு எந்த சூழ்நிலையில் வன்முறையாக மாறியது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதுபோன்ற குடும்ப வன்முறை சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசார் அல்லது அவசர உதவி அமைப்புகளை அணுகுவது அவசியம்.