கணவன், கள்ளக்காதலன் 2 பேருடன் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும்... காவல்நிலையத்தில் அடம் பிடித்த இளம்பெண்!
உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம், மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால், கணவர் இல்லாத நேரத்தில் அஞ்சுவின் வீட்டிற்கு நிதின் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கண்டித்தும், அஞ்சு தனது கள்ளக்காதலைக் கைவிட மறுத்துள்ளார். கணவரின் எதிர்ப்பை மீறித் தனது வீட்டிற்கு நிதினை அழைத்து வந்து அவர் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், விவகாரம் குறித்துச் சுபம் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுபம் தனது மனைவி தன்னுடன் அல்லது அவரது காதலனுடன் இருக்க வேண்டும் என்றும், இருவருடன் சேர்ந்து இருக்க முடியாது என்றும் கூறினார். ஆனால், அஞ்சு தனது கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும் என்றும் இருவருடன் ஒரே வீட்டில் வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாகப் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர முயன்றனர். எனினும், நீண்ட விவாதத்திற்குப் பிறகும் இந்த விவகாரத்தில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.