கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 இளைஞர்கள் பலி... பெரும் சோகம்!
Nov 25, 2026, 13:30 IST
ஐதராபாத் நகரத்தில் உள்ள பாசுபள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) சுத்தம் செய்யும் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்கள் எச்சுமன் (24), சுரேஷ் (25) மற்றும் பவன் (25) என்பதை உறுதி செய்தனர்.
அவர்களது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்