சுடு தண்ணீர் எடுக்கும்போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி... தாயின்றி தவிக்கும் ஒரு வயது குழந்தை !

 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், வாட்டர் ஹீட்டர் மூலம் சூடாக்கிய தண்ணீரை எடுக்க முயன்ற 26 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வயது ஆண் குழந்தையின் தாயான அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டீல் குவளையைப் பயன்படுத்தியபோது விபத்து

ஹைதராபாத்தின் பாரத் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஆயிஷா சித்திக். இவர் ஒரு வாளியில் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரைச் சூடாக்கியுள்ளார். பின்னர், ஸ்டீல் குவளையைப் பயன்படுத்தி தண்ணீரை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் நடந்தபோது அவரது கணவர் அப்துல் ரவூப் வீட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், ஆயிஷா சித்திக்கிற்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. தகவலறிந்து வந்த போரபண்டா போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு ஏற்ப