போட்டியின் நடுவே மலம் கழித்த வீராங்கனை.. நிறுத்தாமல் தொடர்ந்து விளையாடி வெற்றி! வைரல் வீடியோ!

 

 

பெய்ஜிங்கில் நடைபெற்ற Hyrox போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோனா வியட்ரிசிக் முதலிடம் பிடித்த நிலையில், போட்டியின் போது ஏற்பட்ட சுகாதாரச் சிக்கல் தொடர்பாக எழுந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Hyrox என்பது ஓட்டப்பந்தயத்துடன் பல்வேறு உடற்பயிற்சி சவால்களையும் இணைத்து நடத்தப்படும் சர்வதேச அளவிலான போட்டியாகும். இதில் வீரர்கள் கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

allowfullscreen

இந்நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற போட்டியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்ட போதிலும், ஜோனா வியட்ரிசிக் போட்டியைத் தொடர்ந்து முடித்ததாக தகவல்கள் வெளியாகின. இதன்போது பொது பயன்பாட்டில் இருந்த உபகரணங்களை பயன்படுத்தியதாக கூறப்பட்டதால், சமூக வலைதளங்களிலும் போட்டி வட்டாரத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து தனது செயலுக்காக ஜோனா வியட்ரிசிக் மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. மேலும், போட்டியில் பெற்ற வெற்றியை துறப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக Hyrox போட்டி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. போட்டியின்போது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்ளும் வீரர்களை உடனடியாக போட்டியில் இருந்து நீக்கும் வகையில் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகளில் வீரர்களின் உடல் திறன் மட்டுமின்றி, பொதுச் சுகாதாரம் மற்றும் பிற போட்டியாளர்களின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால், இந்த சம்பவம் தொடர்பான விதிமுறை மாற்றம் கவனம் பெற்றுள்ளது.ஜோனா வியட்ரிசிக் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் Hyrox போட்டிகளில் சுகாதார நடைமுறைகள் குறித்த புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.