“நான் பலிகடா!” - ‘ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை” - எடிட்டர் உமாசங்கர் வாக்குமூலம்! உண்மைக் குற்றவாளிகள் யார்?
‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக, படத்தொகுப்பாளர்உமாசங்கர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
நீதிமன்றத்தில் உமாசங்கர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களில், “திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தொழில் தர்மத்திற்கு மாறாக நான் ஒருபோதும் செயல்பட்டது கிடையாது. இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளையும், உண்மைக் குற்றவாளிகளையும் தப்பிக்க வைப்பதற்காக என்னைப் ‘பலிகடா’ ஆக்கச் சில தரப்பினர் முயற்சி செய்கின்றனர்.”
தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், முறையான விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சந்தானம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘ஜனநாயகன்’ படம், அதன் இறுதிக்கட்டப் பணிகள் எடிட்டிங் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்த போதே கசிந்தது. இது படத்தின் வசூலைப் பாதிக்கும் எனப் படக்குழுவினர் கவலை தெரிவித்திருந்த நிலையில், எடிட்டரே நீதிமன்றம் வரை சென்றிருப்பது இந்த விவகாரத்தில் உள்ள மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு முட்டுக்கட்டை போடவும், லீக் ஆன லிங்குகளை அகற்றவும் சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.