undefined

 நான் ஷாலினிக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்...  அஜித் நெகிழ்ச்சி!

 
 

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் குடும்ப வாழ்க்கை மற்றும் தனது மனைவியின் ஆதரவினை பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

அஜித் கூறியதாவது: “நான் ஷாலினிக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ரேஸிங்கில் பங்கேற்பேன், சண்டை காட்சிகளில் நானே நடிப்பேன் — என்னைப் போன்றவருடன் வாழ்வது எளிதான விஷயமல்ல. ஆனால் ஷாலினி எனக்கு மிகப் பெரிய உறுதுணை. இன்று நான் எந்த நிலையிலும் இருப்பதற்கு அவரின் ஆதரவு முக்கிய காரணம். இவையெல்லாம் அவரின் துணையின்றி சாத்தியமாகாது,” என்று தெரிவித்தார்.

அஜித் கடைசியாக நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்கிய ஆதிக், தற்போது அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!