கண்ணீர் வீடியோ!! நாட்டை காத்த என்னால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை!! ராணுவ வீரர்  வேதனை!!

 

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.  குறிப்பாக காங்போக்பியில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவரான ராணுவ வீரர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்

<a href=https://youtube.com/embed/4oj5nwiImQI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4oj5nwiImQI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Manipur Horror I "Fought Wars for India but could not save my Wife" I Husband of Viral Video Victim" width="640">

அதில் அவர் கூறியிருப்பதாவது, “திடீரென வந்த வன்முறை கும்பல் 2 அல்லது 3 பெண்களை தனியாக அழைத்து சென்றது. அதில் ஒருவர் என் மனைவி. அவர்களின் ஆடையை வலுக்கட்டாயமாக கழற்ற சொன்னது அந்த வெறியாட்ட கும்பல். அப்போது அவர்களை காப்பாற்ற கிராம மக்கள் வந்தனர். ஆனால் அந்த கும்பல் என் கண் முன்னே என் தந்தையை சுட்டுக்கொன்றது. நாட்டிற்காக கார்க்கில், இலங்கை சென்று பணியாற்றியுள்ளேன்.


ஆனால் எனது மனைவி, தந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்த கும்பலுடன் போலீசும் இருந்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வன்முறை வெறியாட்டம் நின்று விட்டதாக நினைக்கவில்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என்ற அச்சம் உள்ளது. அந்த கலவரக்கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அளித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!