undefined

மது குடிக்க பணம் இல்லை.. விரக்தியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 

மதுரை பாம்பன் நகர் குமரன் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சிவராமனுக்கு (42) பிரபாவதி என்ற மனைவியும், திலீபன் ரெட்டி (வயது 13), மகேஷ் ரெட்டி (வயது 8) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். சிவராமன் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவராமன் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவராமன் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் சிவராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவராமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று பாம்பன் நகர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!